சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு : ஆகஸ்ட் 16-ல் தொடக்கம்..

சிபிஎஸ்இ பிளஸ் 2 துணைத் தேர்வு ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன்படி பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணானது வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத்தேர்வை எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 19 பாடங்களுக்கு மட்டுமே துணைத் தேர்வு நடைபெறும் என்றும்,
அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைத் தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

விருப்பத்தேர்வு எழுத விரும்புவோர் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய தனித்தேர்வர்களும் மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும் சிபிஎஸ்இ அமைப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Mon Aug 2 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 20,385 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,63,544 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 26 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 28 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை […]
district-wise-corona-cases-2-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய