சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு..

கொரோனா பெருந்தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்வது என மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்தது. மேலும் மாணவர்கள் நலனையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Next Post

ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - பள்ளி கல்வித்துறை உத்தரவு..

Fri Jul 30 , 2021
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர் சேர்க்கைப் பணிகளை அரசு அறிவித்துள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி மாணவர சேர்க்கை பணிகளை […]
Govt-students-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய