
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு 2020-21 கல்வியாண்டிற்க்கான தேர்வு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பது.
இதனையடுத்து அவர்களுக்கான மதிப்பெண்களை, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும், 12 ஆம் வகுப்பு பருவத் தேர்வு, செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கணக்கிடப்பட்ட மதிப்பெண் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
Click here… Get CBSE-12th-Results
Click here.. Get CBSE-Plus2-Results-2021
மேலும், மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு கொரோனா தொற்று குறைந்த பின்னர் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.