சி.பி.எஸ்.இ. தேர்வு கால அட்டவணை வெளியீடா ? சி.பி.எஸ்.இ. விளக்கம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் அறிவித்தது. முதல் பகுதி தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், 2-வது பகுதி தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப பாடங்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல் பகுதி பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதாக செய்தி வெளியானது. நவம்பர் மாதம் தேர்வு நடைபெற இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இது குறித்து சி.பி.எஸ்.இ. விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.இதில் சமூக வலைத்தளங்களில் போலியான தேர்வு அட்டவணை பரப்பப்பட்டு வருவது உண்மையல்ல .மேலும் இந்த செய்தி 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள்- மாணவிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது வரை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எந்தவிதமான தேர்வு அட்டவணையையும் வெளியிடவில்லை’’ எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Mon Oct 18 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 14,570 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 150 பேரும், கோவையில் 130 பேரும், ஈரோட்டில் 88 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக […]
district-wise-corona-updates-18-10-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய