2021 – 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு..

2021 – 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்க்கான பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டும்,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது. மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது.கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 – 21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது 2021 – 22 கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு பருவங்காளாக நடத்தப்பட உள்ளது.பொதுத் தேர்வானது நவம்பர் – டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் – ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 – 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Tue Jul 6 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 407, ஈரோட்டில் 311 பேருக்கும்,சேலத்தில் 228 பேருக்கும், தஞ்சாவூரில் 206 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த […]
district-wise-abstract-of-corona-cases-in-TN
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய