CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 20க்குள் வெளியீடு..

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற இருந்த CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த தேர்வு வாரியம் அவர்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்துள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை 20 ஆம் தேதிக்குள் வெளியிட உள்ளதாக CBSE தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தற்போது தெரிவித்துள்ளார்.மேலும் 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 31க்குள் வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை CBSE மாணவர்கள் அனைவரும் cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ CBSE இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் CBSE வெளியீடும் தேர்வு முடிவுகள் திருப்தி அளிக்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கொரோனா தொற்று நிலைமைகளை பகுப்பாய்வு செய்த பின்னர் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த விருப்பத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களது இறுதி மதிப்பெண்களாக கருதப்பட வேண்டும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Post

நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் - மத்திய கல்வித்துறை அறிவிப்பு..

Mon Jul 12 , 2021
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வானது வரும் செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடப்பாண்டு […]
NEET-Exam-2021

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய