சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து : 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையானது மிக தீவிரமடைந்து வருகிறது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கமானது படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வலுத்து வந்தன.

இதனைத்தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வானது ரத்து செய்யப்படுவதாகவும் மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வருவதன் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாகவும்,மேலும் மே 4 ஆம் தேதி தொடங்க இருந்த 12-ஆம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Next Post

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் அரியர் தேர்வுகள் : தமிழக அரசு அறிவிப்பு

Thu Apr 15 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த அகில […]
arrear-exams-conduct-online
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய