ஆன்லைன் மூலம் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டும் ,மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது.இந்நிலையில் சமீபத்தில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தாத பள்ளிகளில் ஆன்லைனிலேயே தேர்வை நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது .மேலும்,தேர்வை நடத்தி அதற்கான மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும், இதற்கு ஜூன் 28 கடைசித் தேதி என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக,செய்முறைத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஜூன் 11-ம் தேதிக்குள் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பட்டாளர் வெளியிட்டுள்ள செய்தியில்,

கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் உள்ள சில பள்ளிகளில் இதுவரை செய்முறைத் தேர்வு மாணவர்களுக்கு முடிக்காமல் உள்ளது.

  • பள்ளி அளவிலான மதிப்பீட்டைப் பொறுத்தவரை மீதமுள்ள செய்முறைத் தேர்வு அல்லது அகமதிப்பீட்டுத் தேர்வுகளை, பள்ளிகள் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்த வேண்டும்.இதற்காக சிபிஎஸ்இ சார்பில் வெளியில் இருந்து தேர்வுக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார்.
  • மேலும், சிபிஎஸ்இ சார்பில் எந்த பாடங்களுக்கு எப்போது தேர்வை நடத்த வேண்டும் என்பதைத் தேர்வு கண்காணிப்பாளர் முடிவு செய்வார் .
  • சிபிஎஸ்இ சார்பில் தேர்வுக் கண்காணிப்பாளர் நியமிக்கப்படாத பாடங்களுக்குப் பள்ளி ஆசிரியரே, தேர்வுக் கண்காணிப்பாளராகத் தேர்வுகளை நடத்துவார். அப்போது ஆன்லைன் மூலமாகவே கேள்விகள் கேட்கப்படும்.
  • பள்ளி அளவிலான தேர்வில் மாணவர்களின் திறனை மதிப்பிட்டு மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மதிப்பீட்டை நடத்தும்போது அனைத்துப் பள்ளிகளும் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பள்ளி அளவிலான தேர்வுக் கண்காணிப்பாளர்கள் மாணவரை மதிப்பிடும்போது, பள்ளி ஆவணங்களுக்காக ஆன்லைனிலேயே புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஜூன் 28ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குப் பிறகு தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 12ஆம் வகுப்புத் தேர்வெழுதும் தனித்தேர்வர்களின், செய்முறை / அக மதிப்பீடு முறை குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Tue Jun 8 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.நாள்தோறும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்த நிலையில் ,இன்றைய பாதிப்பானது 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 409 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக […]
district-wise-corona-in-tamilnadu-6-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய