தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு அரசு தேர்வுகளை நடத்தி வருகிறது .2021 ஆம் ஆண்டிற்கான முழு கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . அரசு சார்ந்த பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை அறிவதற்கு கால அட்டவணை மிகவும் அவசியமாகிறது.TNPSC கால அட்டவணை -2021 ஐ இப்பதிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .
தமிழகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமர்சையாக நடைபெறும் .உலக புகழ் பெற்ற வரலாற்றுமிக்க சிதம்பரம் நடராஜர் பெருமான் திருக்கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும் , மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் . இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசன விழா வருகிற டிச.21 தேதி வெகு விமர்சையாக தொடங்குகிறது .திங்கட்கிழமை (டிச .21) […]
தமிழகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழகம் முழுவதும் சுமார் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியிருந்தார் .இதன் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று முதல்வர் திறந்து வைத்தார் . காய்ச்சல் ,சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் மினி […]
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் .தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார் . டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் ,தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 % இடஒதுக்கீடு வழங்கும் […]
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,தமிழகத்தில் அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் அவசியம் என தெரிவித்துள்ளார் .அவர் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியயை கொண்டு வந்து ,பின்னர் அரசியலுக்கு வருவேன் என முன்பே அறிவித்திருந்தார்.டிசம்பர் 31 ,2017 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவேன் என முன்பு அறிவித்திருந்தார் ,அந்த அறிவிப்பு இந்த டிசம்பர் 31 ல் நிறைவேறும் எனவும் தெரிவித்தார் .இந்த அறிவிப்பு ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது […]
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புரவி புயலாக உருவெடுத்துள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் புயலாக வலுப்பெற்று ,இலங்கையின் திருக்கோணமலை அருகே 400 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது .இந்த புயலானது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி திரிகோணமலைக்கு மிக அருகே […]
நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பட்டநிலையில் இருந்தது ,இது மீண்டும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது . மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில்,நிவர் புயலின் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது .சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி […]
கனமழை மற்றும் புயல் காலங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன .புயல் எச்சரிக்கை கூண்டுகள் 1 முதல் 11 கூண்டுகள் ஏற்றப்படுகின்றன .புயல் எச்சரிக்கை கூண்டுகள் இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளாலும்,பகல் நேரங்களில் மூங்கில் தடைகளால் ஆன குண்டுகளும் ஏற்றப்படுகின்றன . ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாககக்கூடிய வானிலை சூழலும் ,துறைமுகங்கள் பாதிக்கப்படமால் ,பலமான […]
தெற்கு வங்க கடலில் சனிக்கிழமையன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது .தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் அபாயம் உள்ளது .இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த “நிவர் “என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளை நோக்கி புயலானது நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த […]
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் வினிஷா ஆவர் .இவர் ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை உமாசங்கர், தாயார் சங்கீதா ஆவர் .இளம் வயதிலிருந்தே அவருக்கு அறிவியல் மீதான ஆர்வம் மற்றும் ஈடுபாடு அதிகமாக இருந்து வந்தது.வினிஷாவிற்கு பள்ளி பருவத்திலிருந்தே அறிவியல் சம்பந்தமான பாடத்திட்டத்தின் மூலம் அறிவியல் ஆர்வமானது அதிகரிக்க தொடங்கியது . வினிஷா கண்டுபிடிப்பின் காரணம் மற்றும் நோக்கம் : […]