தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு ஜெ.இ.இ. அல்லது நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறையானது கடந்த ஆண்டு (2020-21)வரை பின்பற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில்(2021-2022) பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த மனுவில் பிற மாநிலங்களில் ஜெ.இ.இ. தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க […]
கல்வி
நவம்பர் 7ம் தேதி அறிவிக்கப்பட்ட இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட தேர்வுக்கு தற்போதுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் ஊக்க திட்ட ஆராய்ச்சி (கேவிபிஒய்) தேர்வு நடத்தப்படுகிறது. மேலும்,இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இத்தேர்வு நடக்கிறது. 11ம் வகுப்பு முதல் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வில் […]
நவம்பர் 1-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தீபாவளி விடுமுறை முடிந்த பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ள பெற்றோர்கள் அதன்படியே செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் பிரச்சினை சரி செய்ய வழி பிறக்கும். இந்த திட்டம் உன்னதமான திட்டம் […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு மையங்கள் அருகிலேயே அமைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். தேர்வர்கள் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்படும் என்றும்,129 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் […]
பி.ஆா்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்டோபா் 27 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. […]
துணை மருத்துவப் படிப்புகளுக்கான பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று திங்கள்கிழமை தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படிப்புகளுக்கான நடப்பு கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது இன்று […]
பள்ளி மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறித் தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக இருக்கும். ஆறாவது வருடமாக இந்தாண்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடுவதற்கும் […]
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,43,236 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,53,042 ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட […]
2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால் , உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பணிநாடுநர்கள் இணைய […]
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று உயர்ந்து 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,27,450 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். […]