தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக,மாணவர்களின் நலன் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், தற்போது நடைபெற்று வரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் அவர்கள் சுகாதாரத்துறை மற்றும் தலைமைச் செயலாளருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.இதில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக 12 […]

1

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும்,மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது,இதனைத் தொடர்ந்து தற்போது ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ICSE வெளியிட்ட அறிக்கையில்,இந்தியா முழுவதும் கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி […]

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாளை மறுநாள் (18.04.2021) நடக்க இருந்த நிலையில்,தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் எம்.டி.(M.D),எம்.எஸ்.(M.S) போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாளை மறுநாள் நடைபெற இருந்தது.ஆனால்,நாடு முழுவதும் தற்போது […]

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த அகில […]

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையானது மிக தீவிரமடைந்து வருகிறது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர பொதுமுடக்கமானது படிப்படியாக அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய பல தரப்பினரிடமிருந்து கோரிக்கை வலுத்து வந்தன. இதனைத்தொடர்ந்து மே 4 ஆம் தேதி நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வானது ரத்து செய்யப்படுவதாகவும் […]

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற இருப்பதால்,மே 3 ஆம் தேதி நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு மே 31 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கி 21-ந் தேதி முடிவடைகிறது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளி கல்வித் துறையின் ஒப்புதலோடு நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளிகளின் வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அமர வைக்கப்படுவதாக ஒரு சில தகவல்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்தவண்ணம் உள்ளன. இதனை கருத்தில்கொண்டு ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, […]

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட்டு,ஜூன் மாத இறுதியில் நுழுவுத் தேர்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 41 மத்திய பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக்கொள்கையின் படி மாணவர் சேர்க்கைகைக்கு பொது நுழைவுத் தேர்வு […]

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானதாவல் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்.16 முதல் 23 வரை இயற்பியல், வேதியியல், கணிப்பொறியியல், தாவரவியல், உயிரியல் போன்ற பாடங்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது.இதற்கான வழிமுறைகளை பள்ளி கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. செய்முறை தேர்வு வழிமுறைகள் : *PIPETTE க்கு […]

என்இஎஸ்டி நுழைவுத் தேர்வானது தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்வதற்க்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.நடப்பாண்டிற்கான என்இஎஸ்டி நுழைவுத் தேர்வானது வரும் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் NEST மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்காண மாணவர் சேர்க்கையானது என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது. என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 90 நகரங்களில் நடைபெற […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய