மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வானது வரும் செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடப்பாண்டு […]

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற இருந்த CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த தேர்வு வாரியம் அவர்களுக்கான தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்துள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை […]

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ.) நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் தரவுகளை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து தரவுகளையும் ஆய்வுசெய்து அதை தற்போது பட்டியலாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 26 கோடியே 50 லட்சம் மாணவர்களும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க 97 லட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

ஆசிரியர் பணிக்கு தேர்வாக இருக்கும், பி.எட்., மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செய்முறை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பி.எட்., மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் வரும் 12 முதல் 17ம் தேதி வரை ஆன்லைன் வழியில், அந்தந்த கல்லுாரிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் சுற்றறிக்கை தற்போது […]

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் கல்விக்கென புதிய திட்டங்களை வகுத்து அவற்றை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்றுமாறு பள்ளி கல்வித்து துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகளை குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது.., தமிழகத்தில் உள்ள […]

தரமணியில் உள்ள அரசு டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ள தரமணியில் ‘டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற, நெசவு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரமணியில் உள்ள டெக்ஸ்டைல் […]

2021 – 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்க்கான பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டும்,ஒத்திவைக்கப்பட்டும் இருந்தது. மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது.கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 – 21 கல்வியாண்டில் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் […]

கொரோனா பெருந்தொற்று காரணமாக துறைத் தேர்வுகளுக்கான 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டுக்கான துறைத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கான […]

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக அகில இந்திய வானொலியில் இன்று முதல் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுகாக இன்று முதல் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என்று […]

கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு 2021 – 2022 கல்வி ஆண்டின் முதலாமாண்டு தொழில்நுட்பத்துறையில் மாணவர் சேர்க்கையானது, 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய