நீட் தோ்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் செப். 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் எழுத விரும்பும் மாணவா்கள் ntaneet.nic.in […]
கல்வி
மாணவ ,மாணவியர் இலவசமாக தாங்கும் விடுதி வசதியுடனும்,கட்டணமில்லாமல் எம்.பில் (M .Phil) படிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 2021 – 22 ஆம் ஆண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இந்நிலையில் கட்டணமில்லாமல் எம்.பில் (M .Phil) படிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன்,தமிழ் ஆய்வியல் நிறைஞர் […]
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது.12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்வதற்கு வசதியாக, அவர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கே மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் மதிப்பெண்ணில் திருப்தியில்லாத மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவது ஒன்றே வழி என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் (மதிப்பெண்களில்) […]
இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வு (சியுசிஇடி) 2021-22 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்,கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டும் இளநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வானது அடுத்த 2022-23 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்றும் யுஜிசி அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய தேசிய […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26ந் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக,மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் மதிப்பெண் தயாரிக்கும் […]
நாடு முழுவதும் நடப்பாண்டிற்க்கான நீட் தேர்வு இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் நடைபெறும் எனவும்,மேலும் முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே .ராஜன் தலைமையிலான குழு அளித்த ஆய்வின் நகலை தமிழக சுகாதார அமைச்சர் […]
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதில் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. தற்போது,நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியதையடுத்து ஜேஇஇ மெயின் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை […]
முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்திருந்தார்.மேலும் இன்று மாலை 5 மணி முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வானது முன்னதாக 155 நகரங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில் , தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை 198 நகரங்களில் நீட்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான […]