பழங்குடியினர் நல பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய கலந்தாய்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் பதவி உயர்வு வழங்கிட கலந்தாய்வு 21.11.2021 அன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக கலங்தாய்வு நாள் மாற்றம் செய்யப்பட்டு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நாளில் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி
18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம், கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 – 2022ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் “கவிமணி விருது” வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை […]
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.அதே நேரம் தனித்தேர்வர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் 19-ம் (19.11.2021) தேதி காலை 11 மணிக்கு வெளியாகும். www.dge.tn.gov.in […]
நேரடி முறையில் சட்ட பல்கலை. தேர்வு நடைபெறும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.சட்ட படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் கரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் இணையவழி வாயிலாகவே நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெளியிட்ட […]
ஒருங்கிணைந்த மருந்தாளுநா் பட்டயப்படிப்பு (டிஐபி) மற்றும் நா்சிங் தெரபி பட்டயப்படிப்பு (டிஎன்டி) ஆகியவற்றுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு நவம்பா் 18-ஆம் தேதி தொடங்குகிறது. இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். www.tnhealth.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை நவம்பா் 18-ஆம் தேதி முதல் டிசம்பா் 10-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ‘இயக்குநா், இந்திய மருத்துவம் மற்றும் […]
அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்திவிட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக் கூடாது என்றும், ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து […]
பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தற்போது கொரோன தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது . பொறியியல் மாணவர்களுக்கான […]
2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள் ,மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.இத்தருணத்தைப் பயன்படுத்தி ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் […]
2021 -2022ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கடந்த அக்டோபர் 17ம் தேதி வரை பொது மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் ,இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டும் பொறியியல் […]
2021ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புக்கான புதிய நடைமுறையினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதில் மாணவா்களுக்கான பாடத்திட்டம், தோ்வு, மதிப்பெண்கள் வழங்கும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது பொறியியல் படிப்புகளில் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண் 20 சதவீதத்திலிருந்து 40 ஆக உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வரை உள்ள பொறியியல் படிப்புகளில் 20 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 80 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்விற்கும் வழங்கப்பட்டு வந்தது […]