புதுவையில் உயர்கல்வி மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான (செண்டாக்) கலந்தாய்வு விண்ணப்பம் விநியோகம் இன்று முதல் தொடங்குகிறது. புதுவை மாநில மாணவர்களுக்கு, நிகழாண்டு உயர்கல்வி மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான சென்டாக் விண்ணப்ப விநியோகத்தை, ஆன்லைன் மூலமாக, புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், கல்வித்துறை அலுவலகத்தில் இருந்துதொடங்கி வைத்தார்.

NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. NET தேர்வை எழுதும் மாணவர்கள் http://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. NET தேர்வானது அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.மேலும் விவரங்களை பெற அதிகாரப்பூர்வ இணையத்தை அணுகலாம் .

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் . பள்ளிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. […]

‘நீட்’ எம்.டி.எஸ். கவுன்சிலிங் ஆனது ஆகஸ்டு 20 முதல் அக்டோபர் 10 வரை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான (எம்.டி.எஸ்.) ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 31-ந் தேதி வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இதுவரை கவுன்சிலிங் நடத்தப்படாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல் மருத்துவ மாணவர்களின் […]

ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்க்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பெருந் தொற்று காரணமாக நீட் நுழைவுத் தேர்வு தாமதமாக நடந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தாமதமாகவே நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந்தேதி நடக்க இருக்கிறது. நோய்த்தொற்றை கருத்தில் […]

தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பித்தால் அவர்களுக்கு பி.ஏ.தமிழ் இளங்கலை வகுப்பு மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் என்று கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து கல்லூரி இயக்குனர் கூறுகையில், நாட்டின் இளையத் தலைமுறையினரை வள்ளுவன் காட்டிய வழியில் வாழ்ந்து அறிவாா்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் எங்கள் […]

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. பட்டய படிப்பு (டிப்ளமோ) மற்றும் பட்ட படிப்பு (பிஎஸ்சி) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் நேரடி 2 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் நேரடி 2 ஆம் ஆண்டு சேர்க்கையானது ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை www.tnlea.com / www.accet.co.in […]

தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2துணைத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.தமிழகத்தில் கொரோன பெருத்தொற்று காரணமாக பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்ளுக்கான தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுதலாம் என பள்ளி கல்வித் துறை அறிவித்திருந்தது. இதன்படி தனித் தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணைத் தேர்வு இன்று (ஆக.6) தொடங்கி 19-ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் […]

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 2021-2022ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் , வட்டார மையங்கள் (Regional Centers) ,அண்ணாமலை பல்கலைக்கழகம் ,சென்னைப் பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி […]

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்கள் தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பெறுவதற்கான படிவங்கள், தேர்வாணைய இணையதளத்தில் கீழ்க்காணும் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நியமனம் – அறிவிக்கை – விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள். படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் – விண்ணப்பதாரர் தொடர்பான படிவங்கள் – தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படிவம். விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட படிவங்களை […]

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய