நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. மேலும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நீட் தேர்வு நடைபெறும் தினத்தில் […]
கல்வி
தொலைதூரக் கல்வி முறையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது. தொலைதூரக் கல்வி முறைக்கு நாடு முழுவதும் கூடுதலாக 11 பல்கலைக்கழகங்களில் 74 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 இளநிலை, 5 முதுநிலை என 10 படிப்புகளுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலை, 2 முதுநிலை என […]
பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடப்பாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது, நடப்பு கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டு சலுகையைப் பெற மாணவா்கள் ஆறாம் வகுப்பு […]
தமிழகத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு , வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் கவின் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு கவின் கலைக் கல்லூரியில் காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, ஆலையக சுடுமண் வடிவமைப்பு, ஆலையக துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகிய படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகள் நான்காண்டு […]
TNTRB தேர்வாணையம் மூலமாக 1098 காலிப்பணியிடங்களை கொண்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கான அறிவிப்பு கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் ஜனவரி 2, 2020 முதல் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று […]
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) நடத்தப்படுகிறது.இந்த பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. பொது நுழைவுத் […]
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு – செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ந் தேதி வரை பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு […]
2010 – ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – ஆணைகள் – வெளியிடப்படுகின்றன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% இட ஒதுக்கீடு. […]
பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான மாணவர்களின் விண்ணப்பப் பதிவு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி காரக்பூர் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். 2022-ம் ஆண்டுக்கான கேட் தேர்வை தற்போது ஐஐடி காரக்பூர் நடத்துகிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி […]
*தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. *கேரளத்திலிருந்து வரும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். *மேலும், மாணவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டவர்களா என்பதை கண்காணிக்க வேண்டும். *பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.