பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ..

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19.7.21 அன்று வெளியிடப்பட்டது.

மதிப்பெண் வெளியீட்டில் திருப்தியில்லாத மாணவர்களுக்கும்,பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்டு மாதம் தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 19-ந்தேதி அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், இன்று முதல் 27-ந்தேதி வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாட தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பாட தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலாது என்றும், மேலும் தற்போது எழுத உள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதியானது என்றும் அறிவித்துள்ளார்.

தனித்தேர்வானது அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6, 9, 11, 13, 16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும்.தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாணவர்கள் 28-ந்தேதியன்று ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் ‘தக்கல்’ திட்டத்தில் ரூ.1,000 சிறப்பு அனுமதி கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Next Post

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி - டி.ஆர்.டி.ஓ (DRDO)

Fri Jul 23 , 2021
தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா கடற்கரைப் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் இருந்து இன்று ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது பாதுகாப்புத் துறையைச் சோந்த நிறுவனங்களுடன் இணைந்து டிஆர்டிஓ தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் என்ஜி ஏவுகணையானது சோதனையின் போது திட்டமிடப்பட்ட 30 கி.மீ தூர இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி இலக்கை அழித்தது. […]
AKASH-NG-DRDO
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய