
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக அகில இந்திய வானொலியில் இன்று முதல் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுகாக இன்று முதல் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இந்த ஒலி வடிவிலான பாடங்கள் கிராமப்புற பகுதிகளில் இணைய சேவை இல்லாத மற்றும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும் அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பச் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.