இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் – பள்ளிக்கல்வித் துறை

இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்திய முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, நடப்பாண்டு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது .ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்றது.இதில் மாணவர்கள் குறைந்த நாட்களே பள்ளிக்கு வந்தனர்.

எனவே மாணவர்கள் அடுத்த கல்வியாண்டில் செல்வதற்கு முன்பாக, பாடத்திட்டங்கள் குறித்த அடிப்படை அறிவு பெறும் வகையில், மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், பயிற்சி புத்தகம் தற்போது மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி புத்தகத்தில் உள்ள பாடங்களை மாணவர்களுக்கு விளக்கும் வகையில், இன்று முதல் (ஏப்., 22ம் தேதி) மே 10 வரை, கல்வி தொலைக்காட்சியில், வகுப்பு வாரியாக பாடங்கள் ஒளிபரப்பப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான அட்டவணை, பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், காலை 8:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறையும், ஒன்றாம் வகுப்பு தவிர, மற்ற வகுப்புகளுக்கு, பாடங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8:00 மணி முதல், ஒன்பதாம் வகுப்புக்கான தமிழ் பாடத்துடன், வகுப்புகள் துவங்குகின்றன.இதை மாணவர்கள் அனைவருக்கு தெரிவித்து, பாடங்கள் கவனிக்க அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Next Post

இலவச 'நீட்' பயிற்சியை மீண்டும் துவங்க, பள்ளிகளுக்கு உத்தரவு - பள்ளி கல்வித் துறை

Thu Apr 22 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 5 ஆம் தேதி நடக்கவிருந்த பொதுத் தேர்வு தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 25ம் தேதி முதல் மீண்டும் இலவச நீட் பயிற்சியை துவங்க, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வகையில் மாநில அரசு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் இடத்தை ஒதுக்கியுள்ளது. மேலும் மருத்துவ ஒதுக்கீட்டில் சேர […]
Neet-practice-for-12th-students-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய