
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ,இதற்கு இணையாக தற்போது கருப்பு பூஞ்சை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கருப்பு பூஞ்சை நோயையை தொற்று நோயாக அறிவித்து மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.இந்த கரும்பூஞ்சை நோயானது நீரிழிவு நோயாளிகளை அதிகம் குறிவைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மத்திய அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்.பின்னர் அவர் கூறுகையில் ..
நாடு முழுவதும் இதுவரை 18 மாநிலங்களில் 5424 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் இவர்களில் 4556 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், 55 சதவீத நோயாளிகளுக்கு நீரிழிவு பாதிப்பும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.