வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் : அறிகுறிகள் என்னென்ன ? கண்டறியும் முறை ?

கொரோனா தொற்றானது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் ,தற்போது புதியதாக பறவைக் காய்ச்சல் சமீபத்தில் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது .

ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்று அழைக்கப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆனது பறவைகளில் காணப்படும் ஒரு வைரஸ் தொற்று. இது மனிதர்களுக்கு அரிதாக உண்டாகும் தொற்று என்றாலும் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்ககூடியது என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தற்போது பறவைக் காய்ச்சல் இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல் மற்றும் கேரளாவில் உருவெடுத்திருக்கும் இந்த பறவைக் காய்ச்சலால் மக்கள் பெரும் அச்சத்திற்க்கு உள்ளாகியுள்ளனர் .1997 ஆம் ஆண்டு H5 N1 என்ற வைரஸ் மனிதர்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் ஆனது பறவைகளுக்கு ஆபத்தானது. மனிதர்களோடு விலங்குகளையும் எளிதாக பாதிப்புக்குள்ளாக்கும்.எனவே நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்

பறவைக் காய்ச்சல் பரவும் முறைகள் :

1.பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பறவையின் மலம், எச்சில், வாய் சுரப்பு, அதன் கண்களில் சுரப்பது போன்றவற்றிலிருந்து வெளிப்படுகிறது. பறவைகள் மற்றும் பறவை முட்டைகள் விற்கும் திறந்த வெளியிடங்கள், திடக்கழிவுகள் காற்றில் கலக்கிறது. அதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு இந்த தொற்று பரவுகிறது.
2.இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளை தொடுதல் மூலமும் ,பறவையின் எச்சம் விழுந்த நீரில் குளிப்பது, அந்த நீரை தொடுவதன் மூலமும் இந்த தொற்று உண்டாகலாம்.
3 .வைரஸ் தொற்று பாதித்துள்ள கோழியின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமும், முட்டையை அரை வேக்காடாக்கி சாப்பிடுவதும் கூட தோற்று பரவும் அபாயம் உள்ளது .

பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் :

பறவைக்காய்ச்சல் தொற்று இருந்தால் காய்ச்சல் இருக்கும் . தொடர் இருமல், வயிற்றுப்போக்கு இருக்கும். சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம். தலைவலி, தசைவலிகள், உடல் நலக்குறைவு, சோர்வு, மூக்கிள் சளி ஒழுகுவது, தொண்டையில் வலி, தொண்டைப்புண் போன்ற பாதிப்புகள் இருக்கலாம் .

குளிர் மற்றும் வியர்வை, போன்றவை உண்டாகும். அரிதாக குமட்டல் மற்றும் வாந்தி போன்றவையும் உண்டாக கூடும். இந்த அறிகுறிகள் இல்லாமல் ஒரு கண்ணில் மட்டும் தொற்று உண்டாகவும் வாய்ப்புண்டு. பெரும்பாலும் மூச்சு விடுதல் சுவாச அறிகுறிகளோடு தொடர்பு கொண்டது.

பறவைக் காய்ச்சல் கண்டறியும் முறை :

1 .தொற்று நோய் கண்டறிதல் பொதுவாக ஆய்வக பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இது நான்கு மணி நேரத்தில் ஆரம்ப முடிவுகளை வழங்குகிறது.
2 .இரத்த எண்ணிக்கை பரிசோதனை உடலில் தொற்று இருப்பதை உறுதி செய்யும்.
3 .மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து எடுக்கப்படும் திரவ மாதிரிகள் வைரஸை கண்டறிய உதவுகிறது. நுரையீரலின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க மார்பக எக்ஸ்ரே செய்யப்படுகிறது.

தற்போது பறவைக் காய்ச்சல் பற்றி தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த நிலையில்,

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ,கேரளத்தில் பரவி வரும் இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .எனவே தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன .

கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தேனீ ,திருப்பூர் ,நீலகிரி ,கோவை ,கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .இந்நிலையில் கேரளாவில் 50 ஆயிரம் எண்ணிக்கையிலான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன .பாதிக்கப்பட்ட பறவைகளை சோதனை செய்யும் பொது அதற்கு H1 N8 வைரஸ் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ,எனவே கேரள மாவட்டங்களான ஆலப்புழா ,கோட்டயம் போன்ற மாவட்டங்களில் பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன .

Next Post

திருச்சி என்ஐடி-ல் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2021 !!

Tue Jan 5 , 2021
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது .தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 1 .Junior Assistant காலியிடங்கள் : 16வயது வரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும் .தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்று உடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருத்தல் அவசியமாகும் . […]
NIT-Trichy-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய