பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சூடுபிடிக்கும் பிரச்சாரம் .பீகார் சட்டப்பேரவை களத்தில் இரு பெரும் கூட்டணிகள் மோதுகின்றன .லாலு பிரசாத் யாதவின் மகனான ,தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஒரு கூட்டணியும் ,நிதிஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டணியும் இடம்பெற்றிருக்கின்றன .

பீகார் சட்டப்பேரவை தேர்தலானது மூன்று கட்டங்களாக வரும் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.இந்தத் தேர்தலில் மகாகட்பந்தன் எனும் பெயரில் ஒரு பெரிய மெகா கூட்டணி அமைந்துள்ளது ,இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ,காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான லாலு பிரசாத் யாதவின் மகனான ,தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

மெகா கூட்டணிக்கு எதிராக நிதிஷ்குமார் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ,ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் செயல்பட்டு வரும் லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளன .இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ,கடந்த சட்டமன்ற தேர்தலில் (2015) ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒன்றிணைந்து பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்று,ஆட்சியையும் அமைத்தது .