
பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது எண்ணப்பட்டு வரும் நிலையில் ,தற்போது நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ,காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது .
பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் ,தற்போது 12 மணிநேர நிலவரப்படி பாஜக கூட்டணியானது 128 இடத்திலும்,காங்கிரஸ் கூட்டணியானது 100 இடங்களிலும் ,மற்றவை 15 இடங்களிலும் முன்னேறி வருகிறது .முன்னிலை நிலவரமானது நொடிக்கு நொடி மாறிக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது .
பீகார் சட்டமனற்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பானமைக்கான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது .முன்னிலை நிலவரத்தின் அடிப்படையில் பாஜக கூட்டணி ஆட்சிஅமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது .எனினும் வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ,முன்னிலை நிலவரமும் மாறிக்கொண்டே இருக்கிறது .இறுதி முடிவானது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் .