நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியான பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார் ..

இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நாசாவின் செயல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் .அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வெற்றிக்கு பிறகு நாசா அணியில் பவ்யா லால் இடம்பெற்றார். இந்நிலையில் அவர் நாசாவின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பவ்யா லால் அவர்கள் அணுசக்தி பொறியியலில் இளங்கலை மற்றும் மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் பட்டங்களையும், பின்னர் தொழில்நுட்பம் மற்றும் கொள்கையில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார் . மேலும் பொது கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டத்தை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகை அலுவலகத்தில் ,பவ்யா லால் அவர்கள் 2005 முதல் 2020 வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் ஆராய்ச்சி உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்.

விண்வெளித் துறையில் பவ்யாவின் சிறந்த பங்களிப்புக்காகவும் , விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான துறையில் தொடர் ஆராய்ச்சிகளுக்காகவும் , பவ்யா லால் அவர்கள் செயல் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டார் என நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Next Post

2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருதுகள்

Wed Feb 3 , 2021
இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது . நடப்பாண்டில்(2021) குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு மொத்தம் 119 பேருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தது .இதில் பத்ம விபூஷண் விருதுகளுக்கு மொத்தம் 7 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் மறைந்த பின்னணி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது .
padma-vibhushan-awars-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய