இருமலைக் குணப்படுத்தும் சிறந்த இயற்கை வழிமுறைகள் என்னென்ன .. ??

இருமல் மற்றும் சளி ஆகியவை குளிர்காலங்களிலும் மற்றும் மழைக்காலங்களிலும் வரக்கூடிய ஒரு இயல்பான ஒன்றாகும்.இதில் சிலருக்கு குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதன் மூலமும் சளி ,இருமல் ஏற்படுகிறது .இதற்கு நாம் மருத்துவரை அணுகுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது .இதனை முற்றிலும் தவிர்த்து இயற்கையான முறையில் நாம் வீட்டில் இருந்தபடியே இருமலை எப்படி முழுமையாக கையாள்வது மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இப்பதிவில் காண்போம் .

*பொதுவாக இருமல் உள்ளவர்கள் காய்ச்சிய வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் .

*மஞ்சள் தூள் ஒரு சிறந்த நோய் எதிர்ப்புசக்தி ஆகும் .பாலுடன் மஞ்சள் தூளை சேர்த்து குடித்தால் இருமல் குணமடையும் .

*பாலுடன் மிளகுத் தூளை சேர்த்து குடிப்பதன் மூலம் வறட்டு இருமலையும் ,தொண்டை வலியையும் குணப்படுத்தலாம் .

*இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய கிராம்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலனளிக்கும் .

*இருமல் மற்றும் சளியை நீக்க ,இஞ்சி சாறுடன் தேனையும் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் .

*தினசரி நாட்களில் தினமும் இருமுறை மூன்று மிளகு அல்லது சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து வாயில் போட்டு மென்று வர இருமல் விரைவில் குணமடையும் .

*சுக்கு ,மிளகு ,திப்பிலி ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து ,நன்றாக போடி செய்து தினமும் பாலில் போட்டு குடிப்பதன் மூலம் சளி ,இருமலை முழுமையாக குணப்படுத்தலாம் .

*எலுமிச்சை பழ சாறுடன் ,தேனை கலந்து குடிப்பதால் தொடர் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

Next Post

ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்த ரொனால்டோ - கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்து புதிய சாதனை ...

Fri Jan 22 , 2021
கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் 760 கோல்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் .இதற்கு முன்பு 759 கோல்கள் அடித்த ஜோசப் பிகானின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ .அதிகபட்சமாக 69 கோல்களை 2013 ஆம் ஆண்டு ரொனால்டோ அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜுவென்டாஸ் அணியானது இத்தாலியன் சூப்பர் கோப்பையை 9 -வது முறையாக வென்றுள்ளது .இறுதிச்சுற்றில் நபோலி அணியை 2-௦ […]
christian-Ronaldo-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய