நாம் அனைவரும் பொதுவாக உடல் நலத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமானதான ஒன்றாகும். நம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பையும் அதன் பயனையும் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வமும் ,ஈடுபாடும் காண்பிப்பது இல்லை .இதில் கறிவேப்பிலையும் ஒன்றாகும் .ஆனால் கறிவேப்பிலை ஆனது உடல் எடையை குறைக்க உதவும் மிக முக்கியமான உணவுப்பொருளாகும் .
கறிவேப்பிலை நமக்கு எளிதில் ,மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும் .நம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் பயன்படுத்தி வருகிறோம் .ஆனால் சிலர் அதன் பயன்களை தெரிந்துகொள்வதில்லை.கறிவேப்பிலை பயன்களை இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம் ..
கறிவேப்பிலையின் பயன்கள் :
1.கறிவேப்பிலை நம் உடலுக்கு செரிமான பிரச்சனையை தீர்க்க உதவுகிறது ,எனவே அனைத்து உணவுகளிலும் கறிவேப்பிலையை சேர்ப்பதற்கு இதுவே காரணமாகும் .
2.கறிவேப்பிலையை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதில் செரிமானத்திற்கும் ,வயிற்று உபாதைகளை தவிர்ப்பதற்கும் பயன்படுகிறது .
3.உடல் எடையை குறைக்க விரும்புவோர் கறிவேப்பிலையை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதில் உடல் எடையை குறைக்கலாம் .
4.தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு அருந்தி வர உடல் எடை வெகுவாக குறைவதைக் காணலாம் .
5.கறிவேப்பிலை ஆனது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது .இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையத் தொடங்கும் .
6.நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது .மேலும் வயிற்றில் கொழுப்புகள் படிந்து உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க உதவுகிறது .