பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை..

2021-2022 ஆம் ஆண்டுக்கான பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் காரைக்குடியில் வெளியிடப்பட்டுள்ளது.

டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., (கணிதப்பாடம் உள்ளடங்கியது) முடித்தவர்கள் தமிழக அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாநில கலந்தாய்வு மையத்தில் நேற்று மாலை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி என 471 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கு 86,703 இடங்கள் மொத்தம் உள்ளன. இதற்கு மொத்தம் 29,894 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுள் தகுதியுள்ள 25,783 மாணவர்கள் தரவரிசையும், அவர்களுக்கான இணையதள கலந்தாய்வு விபரங்களும் www.tnela.com இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு தேதி விவரங்கள்:

கலந்தாய்வு வியாழன் (செப். 23) மற்றும் வெள்ளிக்கிழமை (செப். 24) அன்று ஆன்லைன் மூலம் சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும். செப்.25 முதல் அக்.10-ந்தேதி வரை பொதுக் கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடைபெறும். செப். 11ந்தேதி பி.எஸ்சி., மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று நிறைவு பெறுகிறது.

மாணவர்கள் தங்களது தரவரிசை நிலையையும், அவர்களுக்கான கலந்தாய்வு தேதியினையும் இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். தகுதிப் பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தங்களின் செல்லிடப்பேசி மற்றும் கணினி உதவியுடன் கல்லூரி விருப்பப்பதிவை சமர்ப்பிக்கலாம்.

Next Post

வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு வெளியீடு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

Thu Sep 23 , 2021
வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தற்போது இணையத்தில் சென்று பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான அட்டவணையை வெளியீடும்.ஆனால் நடப்பாண்டில் […]
Agriculture-exam-result-announced-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய