
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடிய நிலையில் மேலும் இரு அணிகளை கூடுதலாக சேர்ப்பதற்கு குறித்து பிசிசிஐ கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது .ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ,அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் பேராதரவானது தொடர்ந்து கிடைத்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் பொதுக்கூட்டமானது ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது .இக்கூட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேலும் இரண்டு அணிகளை சேர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது .இதன்படி 2022 முதல் 2 அணிகள் என மொத்தம் 10 அணிகளை சேர்த்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது .
தற்போது ஆமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமானது கட்டப்பட்டுள்ளது ,இதனடிப்படையில் ஒரு புதிய அணியை சேர்க்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது மற்றும் குஜராத் சார்பாக ஒரு புதிய அணியானது களமிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .
நடப்பாண்டில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது .
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார் .
ஐசிசி (ICC) அமைப்பானது கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் செப்பதற்கான முழு முயற்சியை எடுத்து வருகிறது . இம்முயற்சிக்கு பிசிசிஐ ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளது.