பி.ஆா்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு : தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்..

பி.ஆா்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்டோபா் 27 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்டமபா் 20-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தநிலையில் தகுதி பெற்றவா்களுக்கான தரவரிசை பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இதைத் தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்று தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Next Post

இந்தியாவில் புதிதாக 14,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Mon Oct 25 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று மீண்டும் 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,89,774 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 8,538, மராட்டியத்தில் 1,410, தமிழ்நாட்டில் 1,127 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று […]
corona-virus-vaccine-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய