
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள்,தயார் செய்யப்பட்டு அவை முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வித் துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்றது.இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், இதில் சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், வீட்டில் இருந்து கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன.இதில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளை, ஜூலை 15ல் துவக்க திட்டமிட்டுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளன. மேலும்,பொதுத் தேர்வு ஜூலை 15ல் தொடங்கி , ஆகஸ்ட் 26க்குள் நடத்தி முடித்து, செப்டம்பரில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.