
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள ,உலகிலே உயரமான இடத்தில் உள்ள அட்டல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் .
அட்டல் சுரங்கப்பாதை ஆனது 3300 கோடி செலவில் அமைக்கப்பட்டதாகும் .இந்த சுரங்கபாதையானது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நினைவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இந்த சுரங்கபாதையானது இதற்கு முன்பு ரோட்டாங் என்ற பெயரால் அழைக்கப்பட்டது .பின்னர் 2019 ஆண்டு மோடி அரசானது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி நினைவாக அட்டல் சுரங்கப்பாதை என்ற பெயரை மாற்றியது .
அடல் பிஹாரி வாஜ்பேயி உடன் ஆய்வாளர் ஷெரிங் டோர்ஜீ நினைவுகள் ;
1998ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயிஐ வரலாற்று ஆய்வாளர் ஷெரிங் டோர்ஜீ சந்தித்தார் இவருக்கு தற்போதய வயது 83 ஆகும்.
1998ஆம் ஆண்டு வாஜ்பேயிஐ சந்திக்க சென்ற மூவர் குழுவில் ஷெரிங் டோர்ஜீம் ஒருவர் ஆவார்
இவர் ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள லஹௌலில் இருந்து சென்றனர் அப்போது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இந்த சுரங்கப்பாதை இருந்தது ஆண்டு தோரும் சாலை போக்குவரத்தை பயன்படுத்தக்கூடிய சுரங்க பாதையாக அமைக்குமாறு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி இடம் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு ஆய்வாளர் ஷெரிங் டோர்ஜீ தம் நினைவுகளை தற்போது தொலைபேசியின் வாயிலாக பகிர்ந்துகொண்டார்.
லடாக் மக்களுக்கு அட்டல் சுரங்கப்பாதை ஆனது அதிக அளவு உதவியக இருக்காது என்பது பொதுவான கருத்தாகும் .ஆனால் அவர்களின் பயண தூரத்தை குறைக்கும் என்பது உண்மையாகிறது .பாரலாச்சா லா, தாங்லாங் லா, லாச்சுங் லா, செர்ச்சு லா போன்ற பிற கணவாய்கள் லே – லடாக் பகுதியை அடல் சுரங்கப்பாதையுடன் இணைகின்றன.இந்தக் கணவாய்கள் பனிக்காலத்தில் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.