அபோபிஸ் என்ற சிறுகோள் 2068-ல் பூமியைத் தாக்குமா! நாசா விளக்கம்!

2068ம் ஆண்டு அபோபிஸ் என்ற சிறுகோளானது பூமியைத் தாக்கும் என பல வதந்திகள் சில மாதங்களாவே பரவி வருகின்றன.இதனால் மனித இனம் அழிய நேரிடும் எனவும் கூறப்பட்டது.,பல குழப்பங்களும் அச்சங்களும் அனைவரின் மத்தியில் நிலவி வருகிறது.இக்குழப்பமான நிலைக்கு நாசா விளக்கம் ஒன்றை அளித்துள்ள்ளது.

நாசா விண்வெளி அமைப்பானது, 2068 ஆம் ஆண்டு அபோபிஸ் என்ற சிறுகோளானது பூமியைத் தாக்கும் என்ற கூற்றை நிராகரித்துள்ளது.மேலும்,நூறு ஆண்டு காலத்திற்கு எந்தவொரு அபாயகரமான விண்வெளி பாறையும் பூமியை தாக்காது எனவும் தெரிவித்துள்ளது.

நாசா அமைப்பானது,ஒரு புதிய துல்லியமான சுற்றுப்பாதை பகுப்பாய்வோடு இணைக்கப்பட்ட ரேடாரைக் கொண்டு 2068 மற்றும் நீண்ட காலத்திற்கு இந்த அபோபிஸ் என்ற சிறுகோளால் எந்தவொரு பாதிப்போ அல்லது அபாயமோ ஏற்படாது என்பதைக் கண்டறிந்தது.மேலும்,நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், 2068-ல் சிறுகோளின் பாதிப்பு சாத்தியம் இல்லை. மற்றும்,குறைந்தது அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தாக்க அபாயத்தையும் காட்டவில்லை என கூறியுள்ளது.

அபோபிஸ் என்ற சிறுகோளானது 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 340 மீட்டர் அகலம் கொண்டது,மேலும் இவை மூன்றரை கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இணையானது என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த சிறுகோள் 2029 ஆம் ஆண்டில் பூமியை நெருங்கி வரும் என்றும்,பூமிக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்,ஆனால் பூமிக்கு அருகிலுள்ள பொருளின் (NEO) கூடுதல் கண்காணிப்புகளுக்கு பிறகு அபோபிஸ் என்ற சிறுகோள் பூமியை தாக்கும் என்ற கூற்று நிராகரிக்கப்பட்டது.

Next Post

பொறியியல் மாணவர்களுக்கு ஏப்ரல்15 முதல் ஆன்லைன் தேர்வு ..

Tue Mar 30 , 2021
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி,கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது,மேலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. நடப்பாண்டு தொடக்கத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது.இதனால் வழக்கம் போல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பின்னர்,மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் […]
engineering-students-online-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய