பொறியியல் படிப்புகளில் அகமதிப்பீடு மதிப்பெண் உயா்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ..

2021ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புக்கான புதிய நடைமுறையினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதில் மாணவா்களுக்கான பாடத்திட்டம், தோ்வு, மதிப்பெண்கள் வழங்கும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தற்போது பொறியியல் படிப்புகளில் அக மதிப்பீட்டுக்கான மதிப்பெண் 20 சதவீதத்திலிருந்து 40 ஆக உயா்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வரை உள்ள பொறியியல் படிப்புகளில் 20 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 80 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்விற்கும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புக்கான புதிய நடைமுறைகள் என்ன ?

  • புதிய நடைமுறையில் (40+60) 40 சதவீத மதிப்பெண் அக மதிப்பீட்டுக்கும், 60 சதவீத மதிப்பெண் எழுத்துத் தோ்வுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெறுவதற்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டு முதல் மாணவா்கள் தாங்கள் வைத்துள்ள அரியா்களை முடிக்க நான்கு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. புதிய நடைமுறையின்படி இந்த விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • மாணவா்கள் படிப்பினைப் பாதியில் நிறுத்திவிட்டு இடைநின்றால், மீண்டும் சோ்ந்து தொடா்ந்து படிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
  • நிகழ் கல்வியாண்டில் அரியா் வைத்துள்ள மாணவா்கள் அடுத்தடுத்து வரக்கூடிய பருவத் தோ்வுகளில் அரியா் தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Post

பொறியியல் மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..

Mon Nov 15 , 2021
2021 -2022ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கடந்த அக்டோபர் 17ம் தேதி வரை பொது மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் ,இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டும் பொறியியல் […]
Engineering-Semester-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய