அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு..

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல்பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டதோடு,அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

முதல்கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம்,கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரிதாவரவியல், விலங்கியல், உயிரிவிலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல், கணினிபயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கும் தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு இந்த மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படுகிறது.மேலும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

9 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம்மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த மதிப்பீட்டுத் தேர்வை வரும் 12-ம்தேதி (செவ்வாய்) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிக்குள் ஒருமணி நேரம் காலஅவகாசம் வழங்கிநடத்த வேண்டும்.

ஒவ்வொரு குழு மாணவர்களுக்கான மதிப்பீடு முடிந்த பின்னர் உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து, ஆசிரியர்கள் இணைய வசதியைபயன்படுத்தியும் இந்த மதிப்பீட்டைசிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இதற்கான உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளித் தலைமைஆசிரியர்களுக்கும் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சிப் படிப்புகள் (பிஎச்டி) : உயர்கல்வித் துறை அனுமதி..

Mon Oct 11 , 2021
தமிழகத்தில் 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஎச்டி பாடப்பிரிவுகள் தொடங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2021-22 கல்வி ஆண்டு முதல் செங்கல்பட்டு இரா.வே. அரசு கலைக் கல்லூரி (வணிகவியல்), சேலம் அரசு கலைக் கல்லூரி (தாவரவியல்), கோவை அரசு கலைக் கல்லூரி (தகவல் தொழில்நுட்பம்), நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி (விலங்கியல்), திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி (உயிர் வேதியியல்), திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் […]
Govt-college-approved-PhD-classes
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய