
அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது .அருப்புக்கோட்டை காந்தி நகரிலுள்ள ஈஷா யோகா மையக்கிளையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு லிங்கபைரவி தேவியின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை மற்றும் வஸ்திரத்தால் அலங்காரங்கள் செய்யப்பட்டன .
அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு 11 வகையான அபிஷேக பொருட்களைக்கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .குங்குமம் ,சந்தனம், வெண்ணெய், எலுமிச்சைப்பழம் ,மஞ்சள் ,வேப்பிலை ,கண்ணாடி வளையல்கள் ,ஸ்ரீபலம்,மலர்கள் போன்ற பொருட்களை கொண்டு தேவிக்கு பூஜை செய்தும் மற்றும் சர்க்கரை பொங்கல் ,சுண்டல் போன்றவற்றை படைத்தும் வழிபாடானது நடைபெற்றது .
இறுதியில் அருள்மிகு லிங்கபைரவி தேவி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது .