ஆன்லைன் மூலம் நடத்தப்படும் அரியர் தேர்வுகள் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகிய அமைப்புகள் ‘அரியா் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது’ என தெரிவித்திருந்தன.மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தது,இதில் தேர்வு நடத்தும் முறையை மேற்கொள்வது,தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவா்கள் அரியா் தோ்வுக்கு விண்ணப்பித்தனா், எத்தனை மாணவா்கள் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனா் என்பது குறித்து முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மே மாதம் முதல் அரியர் தேர்வுகளை ஆன்லைனில் மூலம் நடத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

முதுநிலை 'நீட்' தேர்வு ஒத்திவைப்பு : மத்திய சுகாதாரத்துறை

Fri Apr 16 , 2021
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாளை மறுநாள் (18.04.2021) நடக்க இருந்த நிலையில்,தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். மேலும் முதுநிலை நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் எம்.டி.(M.D),எம்.எஸ்.(M.S) போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு நாளை மறுநாள் நடைபெற இருந்தது.ஆனால்,நாடு முழுவதும் தற்போது […]
Post-graduste-neet-exam-postponed
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய