
சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்.25 ஆம் தேதி அன்று நடக்கவிருந்த ராணுவ ஆள் சேர்ப்பு பொது நுழைவுத் தேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட அறிக்கையில், இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம், செவிலிய உதவியாளர், கிளார்க் உட்பட, ஆறு வகை பணிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் உள்ள, அருணை இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் 2020 ஏப்ரல், 15 முதல், 25ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டது.ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட ஆள் சேர்ப்பு முகாம்,நடப்பாண்டு பிப் 10 முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது.
தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்க இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும்,தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,தேர்வு நடைபெறும் புதிய தேதி, http://www.joinindianarmy.nic.in என்ற, ராணுவ இணையதளத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.