
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை B.Ed முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நாளை முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 7அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி மாணவர்கள் www.tngasaedu.in , www.tngasaedu.org ஆகிய கல்லூரி கல்வி இயக்கக இணையதளங்கள் மூலம் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய இயலாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். படிப்பிற்கு விண்ணப்பிக்க, பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய் ஆகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இணையத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 04428271911 என்கிற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.