
தேசிய திறனாய்வுத் தேர்வின் மூலம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்தேர்விற்கு நவம்பர் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் (2021- 2022) ,அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதம் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.11.2021. மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போதே தங்களது வகுப்புச் சான்றிதழை ( Community Certificate ) ( SC / ST / OBC ( Non – Creamy Layer ) / EWS ( Economically Weaker Section ) தவறாது சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் Online- ல் பதிவேற்றம் செய்யப்படும் போது பதிவேற்றம் செய்யப்படாத வகுப்புச் சான்றிதழ்கள் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.