
ஏப்ரல் 12-ம் தேதி முதல் அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வானது தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்தேர்வானது நடைபெறவில்லை. இந்நிலையில் ,நடப்பாண்டிற்கான அரசு கணினி சான்றிதழ் தேர்வானது நடத்தப்பட உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இத்தேர்விற்கு வரும் ஏப்ரல் 12 முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் பணிகளுக்கு கணினி சான்றிதழ் தேர்ச்சி கட்டாயமாகும். இப்பதவிக்கு கணினி சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தொழில்நுட்பக் கல்வித் தகுதி பெறாதவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு கணினி சான்றிதழ் தேர்ச்சியானது அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு கணினி சான்றிதழ் தேர்வு எழுதுவதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சில் இளநிலை தேர்வில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group – 4 தேர்வுக்கு கணினி சான்றிதழ் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்,ஆனால் இத்தேர்வில் (குரூப்-4) தேர்ச்சி பெரும் பட்சத்தில்,அவர்கள் குறிப்பட்ட காலத்திற்குள் கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களது பணியானது நிரந்தரம் செய்யப்படும்.