உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ..

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26ந் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஜூலை 31-ந் தேதி வெளியாக உள்ளதால் மாணவர்கள் கல்லூரிகளில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இளநிலை பட்டப்படிப்பு பொது நுழைவுத் தேர்வு திட்டம் ஒத்திவைப்பு..

Mon Jul 19 , 2021
இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது நுழைவுத் தோ்வு (சியுசிஇடி) 2021-22 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்,கொரோனா மூன்றாம் அலையை கருத்தில் கொண்டும் இளநிலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத் தேர்வானது அடுத்த 2022-23 கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படும் என்றும் யுஜிசி அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய தேசிய […]
University-Grants-commission
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய