முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்புக்கு (M.Ed) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

தமிழகத்தில் உள்ள 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும், முதுநிலை கல்வியியல் பட்டப் (எம்எட்) படிப்பில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது

நடப்பாண்டில் எம்எட் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் 13ம் தேதி வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org ஆகிய இணைய தளங்களின் மூலம் பதிவு செய்யலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரியின் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்தினால் போதுமானது,மேலும் விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணத்தை இணைய வழியில் அல்லது கல்லூரிகள் சேர்க்கை உதவி மையங்களில், இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை-6 என்ற பெயரில் வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை பெற மாணவர்கள் care@tngasaedu.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மற்றும் 044-28260098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் கூடுதல் விவரங்களை பெறலாம்.

Next Post

நோபல் பரிசு 2021 : மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு அறிவிப்பு..

Mon Oct 4 , 2021
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்டோபர் 5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக டேவிட் […]
Nobel-prize-for-Medicine-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய