அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..

தமிழகத்தில்‌ உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுகலைப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலைப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.org, www.tngasapg.in என்ற இணையதள முகவரியில்‌ பதிவு செய்யலாம்‌ என்று கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள்‌ மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • விண்ணப்பக்‌ கட்டணம்‌ – ரூ.58.
  • பதிவுக்‌ கட்டணம்‌ – ரூ.2.
  • எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்‌ கட்டணம்‌ ஏதுமில்லை
  • பதிவுக்‌ கட்டணம்‌ – ரூ.2 மட்டும்‌.
  • விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள்‌ Debit Card/ Credit Card/ Net Banking மூலம்‌ இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்‌.
  • இணையதளம் வாயிலாகக்‌ கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில், ‌”The Director, Directorate of Collegiate Education, Chennai என்ற பெயரில்‌ 23/06/2021 அன்று அல்லது அதற்குப்‌ பின்னர்‌ பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும்‌ செலுத்தலாம்‌.
  • இணையதளம் வழியாக விண்ணப்பம்‌ பதிவு செய்யத்‌ தொடங்கும்‌ நாள்‌- 23.08.2021
  • இணையதளம் வழியாக விண்ணப்பம்‌ பதிவு செய்ய இறுதி நாள்- 01.09.2021..

Next Post

இந்தியாவில் 25 ஆயிரமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..

Mon Aug 23 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது.நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,24,49,306 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 389 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,756 ஆக […]
corona-new-vaccination-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய