MBA, MCA சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம் : தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..

எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு ஆகஸ்ட் 11 முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

2021-2022ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழகம் , வட்டார மையங்கள் (Regional Centers) ,அண்ணாமலை பல்கலைக்கழகம் ,சென்னைப் பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றுகளுடன் www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப் படிப்புகளுக்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு தொடங்கும் நாள்: 11.08.2021, கடைசி நாள்: 31.08.2021 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது
  • பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
  • நடப்பு கல்வியாண்டில் MBA / MCA முதுநிலைப் பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
  • மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும்.கூடுதல் தகவல்களைப் பெற 0422 – 2451100 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Thu Aug 5 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 20,138 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25,69,398 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 33 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 220 […]
district-wise-corona-updates-5-8-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய