‘கேட்(GATE)’ நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..

நாடு முழுவதும் உள்ள மத்தியக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,ஐ.ஐ.எஸ்.சி உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும் எம்.இ.,எம்.டெக்.,எம்.ஆர்க்.,உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

கேட் நுழைவுத் தேர்வானது ஆண்டுதோறும் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது.கேட் நுழைவுத்தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். நடப்பாண்டு கேட் நுழைவுத் தேர்வை ஐஐடி காரக்பூர் நிறுவனம் நடத்துகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்தத் தேர்வில் புதிதாக 2 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் புதிதாக புவிசார் பொறியியல் – GE (Geomatics Engineering) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் – NM (Naval Architecture and Marine Engineering) ஆகிய 2 தாள்கள் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட் நுழைவுத் தேர்வுக்கு வருகிற 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.தாமதக் கட்டணத்துடன் சேர்த்து, அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Next Post

இந்தியாவில் தொடர்ந்து 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

Thu Aug 5 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,18,12,114 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,26,290 ஆக […]
vaccine-coronavirus-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய