
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளில் 25,611 பேர் விண்ணப்பித்தனர்.நேற்று இரண்டாம் நாள் வரை 41 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்தனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது . இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வி ஆண்டின் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 13ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு ஆண்டிற்கான கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும் டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் ஆன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.