தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

1

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த விதிமுறைகள் அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .மேலும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு :

*தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இரவு நேர ஊரடங்கின் போது,அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

*மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

*அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 1.50 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு :

*தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முழு ஊரடங்கு அன்று இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதனை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

*முழு ஊரடங்கு நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

*திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல் மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

*சுற்றுலாத் தலங்களான நீலகிரி,கொடைக்கானல்,ஏற்காடு போன்ற இடங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

*ஊரடங்கு நாட்களில்,தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அதெரிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை கொண்டு வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*கொரோனா தொற்று காரணமாக,புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

*கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விதித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனவிலிருந்து தற்காத்துக்கொள்ளமுடியும்.பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது,அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது,சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வது போன்றவற்றை முறையாக கடைபிடித்தால் மட்டுமே நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

One thought on “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

Comments are closed.

Next Post

இந்தியாவில் புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று

Mon Apr 19 , 2021
இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு பொதுமுடக்கம் மற்றும் இரவு நேர பொதுமுடக்கத்துடன் கூடிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.20 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு […]
corona-updates-19-4-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய