
தமிழகத்தில் கொரோன அச்சுறுத்தல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கல்லூரிகள் சுமார் 9 மாத காலமாக மூடியிருந்த நிலையில்,கடந்த நவம்பர் மாதத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன .
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் சமீபத்தில் நடைப்பெற்று வருகின்றன .இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது .
அண்ணா பல்கலைக் கழகமானது முழு நேர மற்றும் பகுதி நேர பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது .
பொறியியல் முழு நேர முதலாமாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 24 ,2021 ஆம் தேதிக்குள் முதல் பருவ பாடங்களை முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .முதலாமாண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் (Practical Exam) பிப்ரவரி 26 ல் தொடங்கும் எனவும் ,எழுத்துத் தேர்வானது (Written Exam)மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பகுதி நேர மாணவர்களுக்கான பாடங்களை மார்ச் 3 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .செய்முறை தேர்வு(Practical Exam) ஆனது 5 முதல் 15 வரை நடத்தப்படும் எனவும் ,எழுத்துத் தேர்வானது(Written Exam) ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த அறிவிப்புகள் அண்ணா பலகலை கழகத்தால் அறிவிக்கப்பட்டது .