
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிதீவிரமடைந்து வருகிறது.இதன் காரணமாக நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு, முழு முடக்கம் போன்ற விதிமுறைகள் அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா எதிரொலி காரணமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த ஐஐடி மெட்ராஸ் செமஸ்டர் தேர்வுகளும் மற்றும் மே 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் மே 10 முதல் கேந்திரியா வித்யாலய பள்ளிகளில் மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வுகளை நடத்த ஐஐடி மெட்ராஸ் திட்டமிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.