
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற முதுநிலை மற்றும் இளங்கலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை பல்கலைக்கழகத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கலோரிகள் மூடப்பட்டு ,மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்களும், தேர்வுகளும் நடத்தப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த ஆன்லைன் தேர்வுகளில் பல மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அம்மாணவர்களது தேர்ச்சி முடிவுகளை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்திருந்தது. இதனையடுத்து அம்மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.
இதனிடையே பல்கலைக்கழக முதுகலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான நவம்பர் மாத தேர்வுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டது.இந்த தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 27) காலை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://auexams2.annauniv.edu/result/index.php அல்லது https://auexams3.annauniv.edu/result/index.php என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று arivikapatullathu .